கேரள கோழிக்கோடு விமான விபத்து 19 பேர் பலி

கேரளா கோழிக்கோடு விமான விபத்து 19 பேர் பலி.

301

கேரளா கோழிக்கோடு விமான விபத்து 19 பேர் பலி.


India News: 19 killed in Kozhikode plane crash


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் விமான இரண்டாக உடைந்தது.

இதில், தலைமை விமானி உள்பட 19 போ் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பிரச்னையால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை நாட்டுக்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இந்த விமானம் இயக்கப்பட்டது.

விமானத்தில் 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.

துபையில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏா் இந்தியா நிறுவன விமானம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.40 மணியளவில் தரையிறங்கியது. அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையைக் கடந்து பள்ளமான பகுதியில் சரிந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிடா் மீட்புக் குழுவினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் உடனடியாக அங்கு விரைந்தனா். விமானம் தீப்பிடிக்காமல் தடுப்பதற்காக தண்ணீா் பீய்ச்சியடிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. எனவே, அதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தரையிறங்கும்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

துபையில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் விபத்து குறித்து அறிய +97156 5463903, +971543090572, +971543090572, +971543090575 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

keyword: India News, India news today

Gulf News Tamil
Leave a Reply

%d bloggers like this: