எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி!gas explosion in Iran

எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி!gas explosion in Iran

276

எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து-19 பேர் பலி! 19 killed in gas explosion in Iran

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மருத்துவ நிலையம் ஒன்றில் எரிவாயு வெடித்து தீ விபத்து ஏற்பட்டத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.gas explosion

இதுகுறித்து ஈரானிய அரசு ஊடகம் தரப்பில், ஈரான் தலைநகர் தெர்ஹானில் அமைந்துள்ள சின அதார் மருத்துவ நிலையத்தில் எரிவாயு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 15 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.gas explosion

அரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிலையத்தின் முதல் தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் சுமார் 20க்கு மேற்பட்டவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்து நிலையத்திலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tag: tamilnews

gulf tamil news

 
Leave a Reply

%d bloggers like this: