ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

141

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

tamil news: Young man beaten up, forced to drink urine

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை சிலர் அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைக்கும் வீடியோ வைரலாகி வந்துள்ளது. இது சம்பந்தமாக அம்மாநிலத்தின் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து காவல் துறையினரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையினால் பாதிக்கப்பட்ட நபர் யார் அவரை எதற்காக அடித்து சிறுநீர் குடிக்க வைத்தார்கள் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது.

ஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது!

திருச்சி என்ஐடி-யில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு !

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிரோகி மாவட்டத்தில் உள்ள பேவ் பலாடி கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனது மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விசயம் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல மாமா வீட்டிற்கு சென்று திரும்பியபோது அந்த இளைஞரை கடத்தி சென்ற சிலர் அவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிரோகி மாவட்ட காவல்துறையினர் எட்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

tag: tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: