பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள்!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள்!

224

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள் | Perambalur News

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் முதல்வரும் அமைச்சரும் ஆலோசனை.

Various difficulties in giving marks to 10th grade students!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். Perambalur News

இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் புதிய கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்துக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹஜ் பயணம்: உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி!

மன அழுத்தம் குறையத் தினமும் யோகா செய்ய ஆலோசனை.

இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி,தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். 20-க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கிரேடு முறையைத் தற்போது அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது. Perambalur News

tags: tamilnews
Leave a Reply

%d bloggers like this: