நவம்பா் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்- பிரதமா் அறிவிப்பு!

நவம்பா் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்- பிரதமா் அறிவிப்பு!

250

 நவம்பா் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்- பிரதமா் அறிவிப்பு!

Free ration stuff till November – Prime announcement!

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

மேலும், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு செயலாற்றி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தின்படி குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமையும், ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படுகிறது. தற்போது அந்தத் திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
Leave a Reply

%d bloggers like this: