தமிழக மாவட்டம் பலவற்றில் வேகமாக பரவி வரும் கொரோனா. 

தமிழக மாவட்டம் பலவற்றில் வேகமாக பரவி வரும் கொரோனா.

199

தமிழக மாவட்டம் பலவற்றில் வேகமாக பரவி வரும் கொரோனா

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The high prevalence of coronavirus in different districts of Tamil Nadu is shocking.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக மாவட்டம் பலவற்றில் பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 17-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் தமிழக மாவட்டம் பலவற்றில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மதுரையில் மட்டுமே கொரோனா பாதிப்பு 493 லிருந்து 1073 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 580 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 816 லிருந்து 1372 ஆக உயர்ந்துள்ளது. 556 புதிய தொற்றுகள் கடந்த 7 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்வு

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

இதேபோல, வேலூர் 194-ல் இருந்து 580 ஆகவும், திருச்சி 179-ல் இருந்து 434 ஆகவும், தூத்துக்குடியில் 487-ல் இருந்து 732 ஆகவும், தேனியில் 164 ல் இருந்து 365 ஆகவும் அதிகரித்துள்ளன.

ஏப்ரல், மே மாதங்களில் இருந்தது போன்ற எச்சரிக்கை உணர்வு குறைந்திருப்பது, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவை பின்பற்றப்படாததே இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். Perambalur News

அதேபோல், அதீத அச்சத்தின் காரணமாக சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

tags: tamilnewscoronavirustamil nadu
Leave a Reply

%d bloggers like this: