இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.! (28.09.2020)

170

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.! (28.09.2020)


தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்றைய நிலவரத்தை தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் 5,589 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்த 5,589 பேர்களில் 1,283 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 70 பேர் பலியாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று 5,554 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 78,614 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,66,657 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

keywords: tamil news, tamil news today, tamil news daily, daily tamil news, today tamil news,
Leave a Reply

%d bloggers like this: