ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம்!

ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம்

142

ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம்!

கொரோனா வைரஸால் ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம்!

Millions of children in Yemen may starve.

கொரோனா வைரஸால் ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. perambalur news

இதுகுறித்து யுனிசெஃப்  கூறும்போது, “ஏமனில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எண்ணிக்கை இந்த வருட இறுதியில் 20% அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால் ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கொரோனா வைரஸைச் சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாவட்டம் பலவற்றில் வேகமாக பரவி வரும் கொரோனா.

திருச்சியில் 250 ஏக்கரில் ரூ.200 கோடி மதிப்பில் தொழில் பூங்கா.

ஏமனில் கொரோனா தொற்றால் இதுவரை 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 386 பேர் குணமடைந்துள்ளனர். 288 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது.

tags: tamilnews,
Leave a Reply

%d bloggers like this: