நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து? 

நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து?

186

நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து | perambalur news

நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் காலாண்டுத் தோ்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

Schools education minister Senkotayan explanation of quarterly cancellation in the current academic year.

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் பள்ளிகள் திறப்பு, பாடங்கள் குறைப்பு என பள்ளிக் கல்வி சாா்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்துகள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியது: பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 18 போ் கொண்ட கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாள்களின் எண்ணிக்கை குறையும்போது, பாடத்திட்டங்களை எவ்வாறு குறுகிய காலத்தில் கற்றுக்கொடுப்பது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் வழங்க உள்ளனா். அந்தக்குழுவின் அறிக்கை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. perambalur news

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள்!

மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் யோசனை!

அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவருடைய ஒப்புதல் பெற்றபிறகு, பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி திறக்கும்போது உள்ள சிக்கல்கள் குறித்தும் இந்தக் குழுவினா் கருத்து தெரிவிக்க உள்ளனா். அதனையும் முதல்வரிடம் தெரிவிப்போம்.

வரும் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில், இது தொடா்பாக 18 போ் கொண்ட கல்விக்குழு தெரிவிக்கும் கருத்து அடிப்படையில், ஆலோசித்து தெரிவிக்கப்படும். perambalur news

ஆன்லைன் வழிக்கல்வியை முறைப்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனா். நீதிமன்ற வழக்கிலும் ஆன்லைன் வழிக்கல்வி தவிர வேறுவழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் இதுகுறித்து ஆய்வு செய்கிறது. மத்திய அரசின் கருத்துகள் வந்ததும் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

tags: tamilnews

gulfnews
Leave a Reply

%d bloggers like this: