கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்

கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்.

260

கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்.

Tamil news: The woman died after colliding with the glass door.

வங்கியின் கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் வேகமாக சென்று மோதிய பெண் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் பீனா பவுல். 40 வயதான இவர் பெரும்பாவூரில் உள்ள வங்கி ஒன்றுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். வங்கிக்குள் இருந்த பீனா தமது காரில் உள்ள பொருளை எடுக்க வேகமாக சென்றுள்ளார். அந்த அவசரத்தில் மூடியிருந்த கண்ணாடி கதவை கவனிக்காமல் வேகமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்.

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

[the_ad id=”7251″]

விபத்தில், கண்ணாடி கதவுகள் உடைந்ததோடு பீனாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதிகமாக இரத்தம்  கொட்டியுள்ளது. அவருடைய வயிற்றிலும் கண்ணாடி சில்லுகள் கிழித்து காயத்தை ஏற்படுத்தின. இதனால் அவரது உடலின் உள்பகுதியிலும் காயங்கள் உண்டாகியுள்ளது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக பீனா பவுலை இருக்கையில் அமர வைத்தனர். நிலைமையை உணர்ந்த வங்கி பணியாளர்கள், பீனாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீனா உயிரிழந்தார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவானது. அந்த காட்சிகள் வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[the_ad id=”7250″]

tag: tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: