ஈரானில் அதிகரிக்கும் கொரோனா!

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா.

135

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா.

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 10,239 ஆக அதிகரிப்பு

Increasing Corona in Iran!

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளளனர். அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,239 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,628 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நிலையில் அங்கு கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 10,239 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு தினங்களாக தினமும் 100 பேர் என்ற எண்ணிக்கையில் கொரோனா  பலி பதிவாகியுள்ளது.

மழை பொழிவு: பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழை.

மங்களமேடு அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.

கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஊரடங்குக் கட்டுப்பாட்டை ஈரான் அரசு தளர்த்தியது. அதைத் தொடர்ந்து திருமண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்கத் தொடங்கினர். இந்நிலையில் தற்போது அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டவர்களிடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான்  தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கொரோனா  தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கொரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி கூறியுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா  பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானில் அதிகரிக்கும் கொரோனாவால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

பொதுவெளியில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடந்த வாரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: