New transport launch

துபாய், ஷார்ஜா இடையேயான புதிய போக்குவரத்து துவக்கம்.

198

துபாய், ஷார்ஜா இடையேயான புதிய போக்குவரத்து துவக்கம். New transport launch between Dubai and Sharjah.

துபாய் மற்றும் ஷார்ஜாவை இணைக்கும் புதிய திட்டம் சனிக்கிழமை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரத்தை 25 நிமிடங்களிலிருந்து 9 நிமிடங்களாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கவானீஜ் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் அல் கவானீஜ் மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகளின் சந்திப்பில் மூன்று பாதைகள் கொண்ட சுரங்கபாதையுடன் கூடிய சாலைகள் இரு திசைகளிலும் உள்ளன. அதேபோன்று அல் அவிரின் (Al Awir) திசையில் அல் அமர்தி (Al amardi) மற்றும் எமிரேட்ஸ் சாலைகள் (Emirates Road) இணையும் சந்திப்பில் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலமும் இந்த திட்டத்தில் அடங்கும் என RTA கூறியுள்ளது.

“எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலை இடையேயான பயண நேரத்தை 25 நிமிடங்களிலிருந்து 9 நிமிடங்களாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அல் கவானீஜ்-ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகள் (அல் கவானீஜ் ரவுண்டானா) ஜங்ஷனில் காத்திருக்கும் நேரம் 33 வினாடிகள் முதல் 45 வினாடிகளாக குறைகிறது” என சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  கூறுகையில், “இது ஒரு மணி நேரத்திற்கு 8,000 முதல் 16,000 வாகனங்கள் வரை சந்திப்பின் திறனை (capacity of the junction) இரட்டிப்பாக்குகிறது, மேலும் அல் கவானீஜ்-அல் அமர்தி சாலைகள் (Khawaneej-Al Amardi Roads) சந்திக்கும் இடத்தில் காத்திருக்கும் நேரத்தை பாதியாக குறைக்கிறது” என்று விளக்கினார்.

our facebook page

Keywords: New transport launch, Uae news, dubai news, sharjah news, gulf news in tamil




Leave a Reply

%d bloggers like this: