ADVERTISEMENT
New Salik Gates to transform Dubai's traffic

துபாயின் போக்குவரத்தை மாற்றும் புதிய சாலிக் கேட்கள்

துபாயில் புதிய சாலிக் கேட்கள், பாலங்கள் கட்டுமானம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என RTA அறிவிப்பு.

New Salik Gates to transform Dubai’s traffic

துபாயில் வருடா வருடம் சாலையில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், போக்குவரத்து நெரிசல் ஒரு மாபெரும் சவாலாக உருவாகி கொண்டு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைவதிலும் தாமதம் ஏற்படுவதுடன், அன்றாட நடவடிக்கைகளிலும் தடை உண்டாகின்றது.

இதைத் தீர்க்க துபாய் அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அதில் சாலைகளின் விரிவாக்கமும், புதிய மேம்பாலங்களின் கட்டுமானமும் அடங்கும்.

தற்போது, துபாயின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் புதிய திட்டங்களின் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை, துபாய் மக்களின் பயணத்தை வேகமாகவும் எளிதாகவும் மாற்றுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாலிக் கேட்கள்:

பிசினஸ் பே மற்றும் ஷேக் சயீத் சாலையில் இரண்டு புதிய சாலிக் கேட்கள் திறக்கப்பட உள்ளது. அதில் பிசினஸ் பே (அல் கைல் சாலை)யில் அமைந்துள்ளது ஒன்று, மற்றொன்று ஷேக் சயீத் சாலையில் மேதான் மற்றும் உம் அல் ஷீஃப் சாலைக்கு இடையில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

அல் சஃபா சவுத் டோல் கேட், ஷேக் சையத் சாலையின் போக்குவரத்து நெரிசலை 42% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் இந்த இரண்டு புதிய சாலிக் கேட்களும் செயல்படத் தொடங்கும் என துபாய் RTA அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளில் பயணத்தை வேகமாக கடக்க முடியும்.

புதிய பாலங்கள்:

RTA இப்போது அல் கைல் சாலையில் இரண்டு புதிய பாலங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று ஜபீல் பகுதியில் 700 மீட்டர் நீளமுள்ள மூன்று வழிப் பாலமாகும், இதில் ஒரு மணி நேரத்திற்கு 4,800 வாகனங்கள் எளிதாகக் கடக்கலாம்.

மற்றொரு பாலம் அல் கூஸ் 1 பகுதியில் 650 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இது அல் மேதான் ஸ்ட்ரீட்டிலிருந்து அல் கைல் சாலையை ஜெபல் அலி நோக்கி இணைக்கும்.

மேலும், அக்டோபர் மாதத்தில் மூன்று புதிய பாலங்கள் திறக்கப்படும் என்றும், தேராவை நோக்கிய போக்குவரத்தை மேம்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலை மேம்பாட்டு திட்டங்கள்:

துபாய் மற்றும் பல பள்ளிப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் கூடுதல் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இது அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை இன்னும் சீரானதாக மாற்றும்.

ADVERTISEMENT

Keywords: New Salik Gates, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News


அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்

Our Facebook Page

அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் 600 திர்ஹம் கடனுக்காக கொலை; 7 பேர் கைது
அமீரகம் பொது மன்னிப்பு: சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *