New currency notes

அமீரகம்: அமீரகத்தில் புதிய பண நோட்டுகள் விரைவில்..!

146

அமீரகத்தில் புதிய பண நோட்டுகள் விரைவில்..! New currency notes coming soon in UAE ..!

ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்டதன் 50 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் நோக்கில் மூன்றாவது மற்றும் புதிய பண நோட்டுகளை புழக்கத்தில் விட இருப்பதாக அமீரக அரசு தெரிவித்துள்ளது.

புதிய பணத்தாளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் (security marks) இடம்பெறும் எனவும், உலகத்தரத்திலான அளவில் புதிய பணத்தாள்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது காஸிர் அல் வதானில் கடந்த புதன்கிழமையன்று துணைப் பிரதமரும் மந்திரி சபையின் விவகாரத்துறை அமைச்சரும் அமீரக மத்திய வங்கியின் தலைவருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ஹமித் முகமது சயீத் அல் அஹ்மாதி ஓய்வு பெற இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து காலித் முகமது சலீம் பலம் தமிமி அவர்கள் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக இயக்குனர் குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரஹ்மான் சலே அல் சலே கலந்துகொண்டார்.

Our facebook page

Keywords: New currency, uae news in tamil, uae news, tamil news, gulf news in tamil, gulf news,




Leave a Reply

%d bloggers like this: