Natural Remedies

உடல் சூட்டைத் தணிக்க நாட்டு மருத்துவம்

647

உடல் சூட்டைத் தணிக்க நாட்டு மருத்துவம்

Natural Remedies To Relieve Body Heat

  • வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம். Body Heat
  • சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். இதனை குறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம் முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.
  • பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம்.
  • பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல, நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உடல் சூட்டை குறைக்கலாம். ஜுரம் மற்றும் வேறு ஏதாவது நோயால் திடீரெனெ உடல் சூடு அதிகமானால் மருத்துவரை அணுகுவதே நல்லது.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Natural Remedies,




%d bloggers like this: