சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க || Nandu Gravy
ஒரு சில படங்களில் காட்டியது போல நண்டு சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்காக படங்களில் காட்டுவது போல ஓவரான சூட்டை தூக்கி நம்மை ஒரு வழிபண்ணும் என்பதெல்லாம் பொய். அவை சிரிப்பிற்காக சேர்க்கப்படுபவை. இருப்பினும் மழைக்காலத்தில் நண்டு சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். நண்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்க செய்கிறது.
தேவையான பொருட்கள்: Nandu Kulambu in Tamil
நண்டு – 1 கிலோ வெங்காயம் – 3 (நறுக்கியது), தக்காளி – 4 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மல்லி – 2 டீஸ்பூன், சோம்பு – 1/2 டீஸ்பூன், துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி – 4 பச்சை மிளகாய் – 3-4, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லி – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: Nandu Gravy in Tamil
சுத்தமாக கழுவிய நண்டை பாத்திரத்தில் நண்டு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்தவுடன் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். இதை செய்வதன் மூலம் நண்டு வாடையும் இருக்காது சாப்பிடும் போது நண்டு மென்மையாக இருக்கும்.
இதையும் தெரிஞ்சுக்கலாம்
பயன்தரும் சமையல் அறை டிப்ஸ் 01
வாணலை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்து கொள்ளவும். அந்த பொடியுடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
நண்டு சமைப்பதற்கு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டுடன் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறிவிட்டு மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது ஏற்கனவே கொதிக்கவைத்து எடுத்த நண்டை சேர்த்து மசாலா சேரும் படி பிரட்டிவிடவும். அதை அப்படியே மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 10நிமிடத்திற்கு பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, கால் மணிநேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டியதுதான். இப்போது சுவையான நண்டு கிரேவி ரெடி.
குழுகுழு காலத்தில் நாம் சொன்ன முறையில் நண்டு கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க. புடிச்சி இருந்தா மற்றவங்களுக்கும் இதை சேர் பண்ணுங்க.
மசாலா மீன் ப்ரை செய்வோமா? | |
காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! | |
சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க | |
அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம். | |
காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்? | |
வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்! | |
சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க! | |
வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! | |
பீட்சாவில் தோசை | |
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா? |
Keywords: nandu kulambu, Nandu Gravy, nandu gravy in tamil