குறைந்த (ரூ. 4999) முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக் கோழி பண்ணை.

குறைந்த (ரூ. 4999) முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக் கோழி பண்ணை.

2020

குறைந்த (ரூ. 4999) முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக் கோழி பண்ணை.


வணிகம்: Naattukozhi farm for home with a low (Rs. 4999) investment.


வணிக ரீதியில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி பெற்று, தமிழகம் முழுவதும் வணிக ரீதியில் நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்து தரும் ஹெலினா நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் திரு.வினோத் அவர்களை சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழின் சுதந்திர தின சிறப்பு பதிப்புக்காக சந்தித்தோம்.

நாட்டுக்கோழி நடமாடும் வங்கி என்று கூறுவார்கள், அது எனது வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மையே, கடந்த மூன்று வருடமாக எனக்கும், எனது குடும்பத்துக்கும் தேவையான பொருளாதாரம் நாட்டுக்கோழி மூலமே கிடைக்கிறது. ரூபாய் 20000 ஆரம்பித்த பண்ணை, இன்று மாதம் குறைந்தது 30000 வரை வருமானம் பெற்றுத்தருகிறது.

நாட்டுக்கோழி பண்ணை தொடங்க பெரிய இடமோ பெரிய முதலீடோ தேவையில்லை. ஆனால் தகுந்த தீவன மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முறைகள் அவசியம்.

தற்சார்பு வாழ்வியல் மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கோடு குறைந்த முதலீட்டில் நாட்டு பண்ண வைக்க தேவையான தூய நாட்டுக்கோழி மற்றும் உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

தற்சார்பு வாழ்வியலை அடிப்படையாக கொண்டு ரூபாய் 4999/-தில் நாட்டுக்கோழி பண்ணை கிட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம்.

நாட்டுக்கோழியில் வளர்ப்பில் லாபம் பெற, நாட்டுக்கோழிகள் வளரும் வரை சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும். இந்த காலதாமதம், தொடக்கத்தில் இருந்த ஆர்வம் இல்லாமல் சிலருக்கு செய்துவிடும். எனவே பண்ணையை மூடி விட்டு செல்கின்றனர். எனவே நாட்டுக்கோழி வளர்ப்போர்கள்கள் உடனே இலாபம் பெரும் நோக்கில் புதிய நாட்டுக்கோழி பண்ணை கிட்டினை அறிமுகம் செய்துள்ளோம்.

நாட்டுக்கோழி பண்ணை கிட்டில் உள்ள சிறப்பு மற்றும் பொருள்கள் :

  • தூய நாட்டு பெட்டைக் கோழிகள் – 5 முட்டையிடும் பருவத்தில் வழங்கப்படும்.
  • கூவும் பருவம் அடைந்த சேவல் – 1
  • ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு
  • 6 மாதத்திற்கு தேவையான தடுப்புசி மற்றும் மருந்து
  • இரை வைக்கும் டப்பா ஒன்று
  • தண்ணீர் வைக்கும் டப்பா ஒன்று
  • நாட்டுக்கோழி வளர்க்கும் முறை PDF புத்தகம்- 1
  • மேலும் தொடர்ந்து எங்களின் வழிகாட்டல்
  • கிராமம் மற்றும் நகர்புறத்தில் வீட்டின் மொட்டை மாடியில் கூட வளர்க்கலாம்.
  • தமிழகம் முழுவதும் டெலிவரி செய்யப்படும்.

தங்களின் முதலீடு 6 மாத காலத்திற்குள் மூன்று முதல் 5 மடங்கு குறையாமல் வளர்ச்சியடையும், மேலும் ஆறு மாதத்திற்கு பிறகு சராசரியாக வீட்டு தேவை போக மாதம் குறைந்தது மூவாயிரம் வருமானம் ஈட்ட முடியும்.

ஒரு வருடத்திற்கு பிறகு இதே கோழிகளை வைத்தே ஒழுங்காக இனப்பெருக்கம் செய்து பாதுகாத்து வந்தால் சராசரியாக வீட்டு தேவை போக, மாதம் குறைந்தது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். என்று ஹெலினா நாட்டுக்கோழி பண்ணையின் உரிமையாளர் திரு வினோத் அவர்கள் தெரிவித்தார். இவர்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த சுதந்திர தினம் முதல் நமக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கட்டும்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். நன்றி

ஹெலினா நாட்டுக்கோழி பண்ணை
செவல் பட்டி போஸ்ட்
சிங்கம்புணரி தாலுகா
சிவகங்கை மாவட்டம்
96777 11318

keyword: Naattu Kozhi

சிறுதொழில் முனைவோர்




%d bloggers like this: