மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர் பலி

வேப்பந்தட்டை அருகே மர்மமான முறையில் விவசாயி சாவு.

458

வ.களத்தூரில் மர்மமான முறையில் விவசாயி சாவு.

Mysterious death of a farmer.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியபோது அவரது வயலில் அன்பழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து அன்பழகனின் மகன் கார்த்திக் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்பழகனை யாரும் அடித்துக்கொன்றார்களா? அல்லது மின்னல் தாக்கி இறந்தாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keyword: Mysterious death




%d bloggers like this: