ADVERTISEMENT
Corporation urges public to maintain clean beaches

மஸ்கட் : கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் – பொதுமக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை.!

Muscat: Corporation urges public to maintain clean beaches

மஸ்கட்: அதிகாரிகள் எவ்வளவோ எச்சரித்தாலும், இன்னும் சிலர் கடற்கரையில் பார்பிக்யூ செய்வதும், வாகனம் ஓட்டுவதும், குப்பை போடுவதுமாகச் செய்கிறார்கள்.

ஈதுல் அத்ஹா விடுமுறையில் கடற்கரை செல்லும் சிலரிடம் அங்குள்ள செய்தி நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் கடற்கரை சம்பந்தமாகக் கவலைப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

மஸ்கட் நகரின் சைஃப் அல் ரவாஹி கூறியது: “எனது குடும்பத்துடன் குப்ரா கடற்கரைக்குச் சென்றேன். அங்கு எரியூட்டிய கற்களில் நான் தெரியாமல் மிதிக்க எனது கால் காயமடைந்தது. இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்” என்றார்.

இது போல மற்றொரு நபரான கலீத் அல் பலூஷி கூறியது: “மாவட்ட நிர்வாகம் அறிவிப்புகளும், விழிப்புணர்வு முயற்சிகளும் எடுத்தாலும், மக்கள் கடற்கரையில் இன்னும் வாகனம் ஓட்டுகிறார்கள். சீப்பிலும் குப்ராவிலும் வாகனங்களைத் தடுக்க தடைகள் அமைக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

சலீம் அல் ஹொசானி கூறியது: “மாவட்டம் பல குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறது. ஆனாலும் சிலர் குப்பையைக் கடற்கரையில் போட்டு விட்டுச் செல்கின்றனர். இது போன்றவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அபராதத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

ஜூன் 19 அன்று மஸ்கட் மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது: ஈதுல் அத்ஹா விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு, அனுமதிக்கப்படாத பகுதிகளில் பார்பிக்யூ செய்வது 100 ரியால் அபராதம் என்று கூறினர். மேலும் யார் அந்தப்பகுதியில் பார்பிக்யூ செய்தனரோ அவர்களே அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இது பற்றி மாநகராட்சி கூறியது: நியமனமிடாத இடங்களில் கிரில் செய்வதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் உண்டாகிறது. கடற்கரை, பூங்கா மற்றும் பசுமை பரப்புகளில் பார்பிக்யூ செய்வதைத் தடை செய்கிறோம். மக்கள் நியமிக்கப்பட்ட இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மே மாதத்தில், மாநகராட்சி வாகனங்கள் கடற்கரைக்குச் செல்லாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை அறிவித்தது. அப்போது அவர்கள் கூறியதாவது: கடற்கரைகள் நிம்மதியாக இயற்கையை அனுபவிக்க வேண்டிய இடங்களாக இருக்கிறது. வாகனங்களைக் கடற்கரையில் ஓட்டுவதால் விபத்து, புகை, மற்றும் இரைச்சல் காரணமாகப் பொதுமக்களுக்கு நிம்மதியும், அமைதியும் கெடுகின்றது.

கடற்கரை விதிமுறைகள் மீறுதல்களை 1111 என்ற அழைப்பு மையத்தில் பொதுமக்கள் புகாரளிக்க மஸ்கட் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

Keywords: Public to Maintain Clean Beaches, Oman News Tamil, Oman Tamil News, Muscat Tamil News, GCC Tamil News, Gulf Tamil News

Our Facebook Page

ALSO READ:
உயரமான கட்டிடத்தில் சாகசம் செய்து வீடியோ எடுத்த பெண் கைது!
விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருவபவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனை!
துபாய்: இந்த ஆண்டில் இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 4 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *