ADVERTISEMENT
Murdered in Sharjah for Dh600 loan; 7 people arrested

ஷார்ஜாவில் 600 திர்ஹம் கடனுக்காக கொலை; 7 பேர் கைது

Murdered in Sharjah for Dh600 loan; 7 people arrested

அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டை 600 திர்ஹம் கடனுக்காக ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணன் தம்பிகள் ஆகிய மூன்று பேரையும் தடிகள் மற்றும் கத்திகளால் தாக்கிய 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஷார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில், அண்ணன் தம்பிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், சகோதரர்களிடம் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை கேட்கவேண்டும் என்ற நிலையில், சண்டை கடுமையான வாய் தகராறாக தொடங்கி, மாறி மாறி தாக்குதலில் முடிந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டவுடன், ஷார்ஜா காவல்துறையால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

பணப் பிரச்சினை காரணமாக தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 7 நபர்களும் ஒப்புக்கொண்டனர். அமீரகத்தில் இப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், சுமுகமாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், குடியிருப்பாளர்களை ஷார்ஜா காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

உயிரிழந்த, காயமடைந்த மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரும் எந்த நாட்டவர்கள் என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

Keywords: Murdered in Sharjah, UAE’s amnesty program, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News


அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்

Our Facebook Page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *