சின்னாறு பகுதியில் நடந்த வாகன விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம். Mother killed in road accident, Son injured
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா கீச்செருவாய் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 40). இவர், நேற்று முன்தினம் மாலை தனது தாய் பச்சையம்மாளுடன் (60) மோட்டார் சைக்கிளில் சின்னாறு பகுதியில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் ரஞ்சித்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பச்சையம்மாள், ரஞ்சித்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பச்சையம்மாள் உயிரிழந்தார். ரஞ்சித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Mother killed, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.