பெண் தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக தாயும் மகளும் விஷம் குடித்தனர்.

396

குடும்ப தகராறு காரணமாக தாயும் மகளும் விஷம் குடித்தனர். Mother and daughter drank poison.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி சரண்யா(வயது 34). லாரி டிரைவரான துரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சரண்யா தனது மகள் தர்ஷினி (12), மகன் பவிஸ்(10), தாய் நல்லம்மாளுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் சரண்யா தனது தாய் நல்லம்மாளிடம் சொல்லாமல் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா தனது மகள் தர்ஷினியுடன் இணைந்து வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரும்பாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

keywords: Mother and daughter drank poison, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: