Monkeys taking revenge

குட்டியைக் கொன்ற நாய்களைக் கொலைவெறியில் பழி வாங்கும் குரங்குகள்.

1014

குட்டியைக் கொன்ற நாய்களைக் கொலைவெறியில் பழி வாங்கும் குரங்குகள்.

Monkeys taking revenge

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் சில நாய்கள் குரங்கு குட்டியைக் கொன்றதைத் தொடர்ந்து நாய்களைக் குரங்குகள் கொன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 250 நாய்களைக் குரங்குகள் தூக்கிச் சென்று உயரமான கட்டிடம் மற்றும் மரங்களிலிருந்து கீழே வீசி கொன்றதாக அறியப்பட்டுள்ளது.

பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் லாவூல் என்ற கிராமத்தில்தான் இந்த குரூர சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குரங்குகள் கூட்டம் நாய்க்குட்டியைப் பார்த்த உடனேயே அந்த குட்டியைப் பிடித்து உயரமான இடத்திற்குக் கொண்டு சென்று கீழே வீசுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குரங்குகள் குறைந்தது 250 குட்டிகளைக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

குரங்குகள் பழிவாங்குவதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். சில நாய்கள் குட்டி குரங்கைக் கொன்றதிலிருந்து குரங்குகள் அப்பகுதியில் உள்ள நாய்க் குட்டிகளை மரத்தின் மேலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து தூக்கி எறிந்து கொல்லத் தொடங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் 5000 பேர் இந்த லாவூரில் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் தற்போது ஒரு நாய்க்குட்டி கூட இல்லை. இக்கிராம மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்கக் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினரால் ஒரு குரங்கைக் கூட பிடிக்க முடியவில்லை.

கிராம மக்களே தங்கள் கிராமத்தில் உள்ள குட்டிகளைக் காப்பாற்ற முன்வந்தனர். பழிவாங்கும் வகையில் குரங்குகள் தாக்கியதால் குட்டிகளைக் காப்பாற்றும் முயற்சியில் சிலர் கட்டிடங்களிலிருந்து விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

அங்கு இப்போது ஒரு நாய் கூட இல்லை என்று கூறும் கிராமவாசிகள், நாய்கள் இல்லாததால், இப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் குரங்குகள் துரத்துவதாகத் திகிலுடன் தெரிவித்துள்ளார்கள்.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Monkeys taking revenge, India News, Tamil News




%d bloggers like this: