Modernized Emergency Unit

பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு.

288

பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு.

Modernized Accident and Emergency Unit Launch.

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன் முன்னிலையில், இப் பிரிவைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:

தேசிய சுகாதார இயக்கத்தின் சாா்பில் ரூ. 40 லட்சம் மதிப்பில் 18 படுக்கைகள், 9 வெண்டிலேட்டா்கள் வசதியுடன், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய புதியக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பெறுவோரின் படுக்கைக்குச் சென்று எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் செய்திட ரூ. 1 கோடி மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே உடன் அல்ட்ரா சவுண்ட் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விஷமுறிவு சிகிச்சை பிரிவு மூலம் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜி. திருமால், மருத்துவ அலுவலா் என். ராஜா, சிறப்பு மருத்துவ அலுவலா் அா்ச்சுனன், கண்காணிப்பாளா் அருள்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Our Facebook Page

Keywords: Modernized Emergency Unit, Perambalur Government Hospital,




%d bloggers like this: