பெரம்பலூரில் மமகவினர் ஊர்வலம்- முற்றுகை போராட்டம். MMK procession in Perambalur – siege protest.
டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெரம்பலூரில் தலைமை தபால் அலுவலகம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெரம்பலூரில் தலைமை தபால் அலுவலகம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுல்தான்மொய்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மீராமொய்தீன் முன்னிலை வகித்தார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சமூக நீதி மாணவர் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மதரசா சாலையில் மவுலானா பள்ளி அருகே இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் வழியாக தபால் நிலையத்தை அடைந்தனர்.
Keywords: MMK procession in Perambalur, Perambalur news, Perambalur district news,
You must log in to post a comment.