மினி பஸ் மோதி மூதாட்டி பலி. Mini bus collides and kills
பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வேம்பு (வயது 75).
இவர் நேற்று காலை தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் வேம்பு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேம்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Mini bus collides, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.