Mappillai Samba rice

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? 

22282

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? Mappillai Samba rice benefits in Tamil.

பொதுவாக பாரம்பரிய உணவுகள் எப்போதும் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோமேயானால் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள், அதை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பட்டை தீட்டப்பட்ட அரிசிகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே 20 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. இவற்றில் ஏகப்பட்ட ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்களை மீட்டுவிட்டார்கள். சீரக சம்பா , காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா போன்றவற்றை ஆர்வத்துடன் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வகையான பாரம்பரிய அரிசிகள் நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதில் பெருமளவு உதவுகிறது. நாம் இந்த பதிவில் மாப்பிள்ளை சம்பா அரிசியை குறித்து தெரிந்துகொள்வோம்.

மாப்பிள்ளை சம்பா இந்த பெயருக்கு தகுந்தார் போல புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் அவசியமான தேவை. இதில் புது மாப்பிள்ளைகளுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.

அப்படி என்ன சத்துகள் இதில் இருக்கிறது (Mappillai Samba rice benefits in Tamil)

வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா என்றால் அது மிகையாகாது. இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் கீழ்கண்ட சத்துகள் தாராளமாக உள்ளது.

  • புரதம்,
  • நார்ச்சத்து,
  • உப்புச்சத்து,
  • இரும்புச்சத்து,
  • துத்தநாக சத்துகள்

இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும். இப்போது புரிகிறதா இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று ஏன் நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள் என்று. அதற்காக இந்த ஒரு சத்து மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இது இல்லாமல் வேறு பலன்களும் இவற்றில் இருக்கிறது. அவற்றை பார்ப்போம்…

​மாப்பிள்ளை சம்பா அரிசியின் பலன்கள் – 1 (Mappillai Samba rice benefits)

சமீப காலமாக முறையற்ற உணவுகளினால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை அதிகரித்துவருகிறது. இவை அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணமாக இருக்கிறது. உணவே மருந்து என்பது நோய்களுக்கு மட்டுமல்ல, ஆண்மை குறைபாட்டுக்கும் உண்டு.

ஆண் தன்மை அதிகரிக்கவும், உடலுக்கு பலம் கொடுக்கும் சத்துகள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கிறது. ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் அதற்கான பலனும் தெரிய வரும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பலன்கள் – 2 (Mappillai Samba rice benefits)

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் மிக முக்கியமானவை. பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பலன்கள் – 3 (Mappillai Samba rice benefits)

இந்த அரிசியை தினசரி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி தொற்று உண்டாக கூடும். நம் உணவில் இந்த சேர்ப்பதன் மூலம் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

அதோடல்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் என்ன செய்து சாப்பிடலாம்? (Mappillai Samba recipe)

  • ஒரு கப் அரிசியை சுத்தம் செய்து கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். சிறிது சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை நீராகாரமாக குடித்து வந்தால் உடலில் பல வியாதிகளும் கட்டுப்படும் உடலுக்கு வலு கிடைக்கும்.
  • இந்த அரிசியில் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும்.
  • இதை சாதமாக்கி சாப்பிடலாம். இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும்.

உடலுக்கு வேண்டிய சத்துகள் இருபாலருக்கும் அதிகப்படியாகவே கிடைக்கும். குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மை தன்மையும் தருகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள். உடலுக்கு பெரும் பலத்தினை தரக்கூடிய மாப்பிள்ளை சம்பா மீண்டும் நமது மக்கள் மத்தியில் அதிக புழக்கத்துக்கு வந்திருப்பது நன்மை தரக்கூடியதே. மாப்பிள்ளை சம்பா அரிசியை வாங்கி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

Our facebook page

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்

சாமை அரிசியின் பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள்

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

தினை அரிசியின் பயன்கள் || Thinai rice

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..!

 ‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா?

‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா?




%d bloggers like this: