Man arrested for threatening

மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டியவர் கைது.

367

மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டியவர் கைது || Man arrested for threatening to shoot wife

Man arrested for threatening

நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் கர்ணன்(வயது 40). இவரது மனைவி விஜயா(35). இவர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கர்ணன் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விஜயாவை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன விஜயா, இது குறித்து அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டிய கர்ணனை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை காட்டி மனைவியை கணவர் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Man arrested for threatening, Perambalur News, Perambalur district news

[the_ad_placement id=”after-content”]




%d bloggers like this: