ஓமானில் இருந்து VBM 6 தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!
Gulf News: List of flights from Oman to VBM 6 in Tamil Nadu.
ஓமானில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட விமான சேவையில் தமிழகம் வரும் விமானங்களின் பட்டியலை இந்திய தூதுரகம் வெளியிட்டுள்ளது.Gulf News tamil
வந்தே பாரத் திட்டத்தின் 6-ம் கட்ட விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ஆறாம் கட்டத்தின் கீழ் ஓமானில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் விபரங்களை ஓமானில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. Oman news tamil
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையில் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை இந்தியாவிற்கு செல்லும் 21 விமானங்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லவிருக்கும் இந்த 21 விமானங்களில் 3 விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விமானங்களும் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. GCC news tamil
மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள docs.google.com எனும் இணையதளத்திலுள்ள படிவத்தில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். படிவத்தை சமர்ப்பித்தவர்கள் ஓமானில் உள்ள ரூவி மற்றும் வட்டாயா போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gulf News
List of Flights scheduled from Oman under #VandeBaratMission – #Phase6 (As on August 23) pic.twitter.com/LdpFlLjlCJ
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) August 23, 2020
keywords: Gulf News tamil, Oman news tamil, GCC news tamil
You must log in to post a comment.