வீட்டில் எறும்புத் தொல்லை

வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்!

378

வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்!

எறும்புத் தொல்லை இல்லாத வீடுகளே இல்லை. மூலை முடுக்குகள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள் என எந்த வழியிலாவது எறும்புகள் வந்துவிடும். தின்பண்டங்களே வீட்டில் வைக்க முடிவதில்லை, குறிப்பா இனிப்பு பொருளை வைத்தாலே சாரை சாரையாக எறும்புகள் வந்து மொய்க்க ஆரம்பித்து விடுகிறது. இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எறும்பின் மூலமாக உணவில் பரவும். வீட்டில் எந்த பகுதியில் வைத்தாலும் எறும்பு வந்துவிடுகிறது அதை எப்படி விரட்டுவது என்று நாமெல்லாம் புலம்புவோம். இயற்கையான வழிமுறையில் அதை எப்படி சரி செய்யலாம்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.

வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்!

kitchen tips in Tamil

எலுமிச்சை

எலுமிச்சைபழ வாடை எறும்புகளுக்கு அறவே பிடிப்பதில்லை. நாம் எப்போதெல்லாம் தரையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கிறோமோ அந்த சமயத்தில் தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் எறும்புகளின் வரவை கட்டுபடுத்தலாம்.

ஆரஞ்சு

இதே போல், ஆரஞ்சு பழத்தின் வாடையும் எறும்புக்குப் பிடிப்பதில்லை. ஒரு கப்பில் வெதுவெதப்பான நீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளிப்பதன் மூலம் எறும்புகளின் வரவை கட்டுபடுத்தலாம்.


டிப்ஸோ டிப்ஸ்..


மிளகு

எறும்புக்கு இனிப்புக்கு ஓடிவரும் காரத்துக்கு ஓடிவிடும் அதாவது இனிப்பு எந்த அளவு பிடிக்குமோ, அதற்கு நேர்மாறாக காரம் சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாடைக்கு எறும்பு எட்டிக்கூட பார்க்காது.

உப்பு

இதே போல், எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உப்பையும் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலம் எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.

வெள்ளை வினிகர்

எறும்புக்கு வினிகர் நறுமணம் ஆகாது. எறும்பு வரும் இடத்தில் வினிகரை சிறிதளவு ஊற்றினால் போதும். எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

இலவங்க பட்டை

இலவங்கப்பட்டைத் தூளை வீட்டில் மூலை முடுக்குகளில் தூவினால் போதும். அந்த வாடைக்கு எறும்புகள் வராது.

துளசி

துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசி செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கவும். பின்னர், அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போடவும்.

சாக்பீஸ்

எறும்புகளை விரட்டுவதற்கு பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சாக்பீஸ்களைப் பயன்படுத்தலாம். வீட்டு வாசலில் இந்த சாக்பீஸைக் கொண்டு கோடு போடலாம், உணவு பாத்திரங்களை தரையில் வைத்தால், பாத்திரத்தைச் சுற்றிலும் தரையில் கோடு போடலாம். இது ஒரு நல்ல தீர்வாக அமையும்.

our facebook page

keyword: Kitchen Tips, Kitchen Tips in Tamil, Tips in Tamil
Leave a Reply

%d bloggers like this: