White Cholam

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

183

‘வெள்ளை சோளம்’ இதிலுள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? benefits of ‘white Cholam’.

benefits of 'white Cholam'

benefits of ‘white Cholam’

சோளத்தில் பல வகைகள் உண்டு. இதில் சில வகை தானியங்களாகவும், சில வகைகள் கால்நடைத் தீவனங்களாகவும் பயிரிடப்படுகிறது. தானியத்திற்கான சோளத்தை ஆங்கிலத்தில் Great millet என்று அழைப்பார்கள்.

சோளத்தின் வகைகள் (Types of Cholam)

சோளத்தில் பலவகைகள் இருக்கின்றன அவை

  • வெண்சாமரச் சோளம்,
  • சிவப்பு சோளம்,
  • வெள்ளை சோளம்,
  • பழுப்புநிற சோளம்

சோளத்தில் உள்ள சத்துக்கள் (Nutrients in Cholam)

இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவைகள் இருக்கின்றன.

இந்த பதிவில் குறிப்பாக வெள்ளை சோளத்தை நாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெள்ளை சோளத்தின் நன்மைகள் (Benefits of white corn (Cholam))

  • இந்த சோளத்தில் உள்ள அதிகப்படியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • வெள்ளை சோளத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதன்மூலம் மாரடைப்பு வராமல் இதயத்தை பாதுகாக்கின்றது.
  • இதில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து உடலில் உள்ள எலும்புகளை வலுவடைய செய்கிறது.
  • வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலுவாதுடன் தேய்மானத்தையும் சரிசெய்கிறது.
  • சர்க்கரை நோயாளிகள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதிலுள்ள கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது.
  • அதிகமான நார்சத்தும், மாவுசத்தும் இருப்பதால் நாம் உட்கொள்ளும் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • மினலர்ஸ், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளதால் உடல் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு தேவையான புத்துணர்சியை தந்து உடலை வலுபெற செய்கின்றது.
  • நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை கூடாமல் பாதுகாக்கின்றது.
  • ஆண்டி ஆக்சிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வெள்ளை சோளத்திற்கு இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
  • குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வெள்ளை அனுக்களை எதிர்த்து போராடும். இதனால் குறைந்த இரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

என்ன? இத்தனை பயன்கள் இந்த வெள்ளை சோளத்தில் இருக்கிறதா என்றுதானே நினைக்கின்றீர்கள். சோளச் சோற்றையும் கம்பஞ்சோற்றையும் தின்ற நமது முன்னோர்களின் ஆரோக்கியத்தை இப்போதுள்ள புதிய தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். வயதானவர்களுக்கு நன்றாகவே இது தெரியும். தெரியாதவர்கள் சோளத்தின் அருமையை முதியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தினமும் கொஞ்சம் ஆகாரமாக எடுத்து கொண்டு நமது உடல் நலத்தை பேனுங்கள்.

Our facebook page

Keyword: benefits of ‘white Cholam’,




Leave a Reply

%d bloggers like this: