கோதுமை பலன்களை தெரிந்து கொள்வோமா?
கோதுமை பலன்களை தெரிந்து கொள்வோமா? ஊட்டச்சத்து நிறைந்த தானியமான கோதுமையின் பலன்களை விபரமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
துவக்கமாக…
உடல் ஆரோக்கியம் நம் வாழ்விற்கு மிக முக்கியமானது. அந்த ஆரோக்கியத்தை பராமரிக்கத்தான் நாம் உணவை உட்கொள்கிறோம். அதிலும் நல்ல உணவாக எடுத்துக்கொள்வது மிகச்சிறப்பானதல்லவா? அப்படி சிறப்பான உணவு தானியங்களில் கோதுமையும் ஒன்று. இந்தப் பதிவில், நம் அன்றாட உணவில் கோதுமையைச் சேர்ப்பதால் ஏற்படும் பல நன்மைகளை ஆழமாக தெரிந்து கொள்வோம்.
கோதுமை பலன்களை தெரிந்து கொள்வோமா? Let’s know the benefits of wheat?
இந்த கோதுமையில் வைட்டமின்கள், தாதுக்கள் (மினரல்கள்) மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த தானியமாகும். கோதுமையில் காணப்படும் முக்கிய சத்துக்கள் பற்றி இங்கே பார்ப்போமா?
தோல் ஆரோக்கியம்: (benefits of wheat)
செலினியலம் அதிகமாக கோதுமையில் இருக்கிறது. இதனால் நமது தோல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உதவுகின்றது. செலினியம், தோல் சுருக்கங்களைத் தடுத்து சருமத்திற்கு இளமைத் தோற்றத்தை அளிக்கிறது.
வைட்டமின்கள் நிறைந்தது: (wheat benefits)
கோதுமையில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் உட்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் ஆற்றல் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
அத்தியாவசிய கனிமங்கள்: (Uses of wheat)
கோதுமையில் காணப்படும் அத்தியாவசிய தாதுக்களில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும். இந்த தாதுக்கள் வலுவான எலும்புகளை பராமரிக்கவும், தசை செயல்பாட்டிற்கு துணையாகவும் மற்றும் இரத்த சோகை நோயை தடுக்கவும் உதவி புரிகிறது.
இதையும் படிக்கலாமே..
காடை முட்டையில் இவ்வளவு பயன்களா?
“உருளைக்கிழங்கு” இதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
உடல் எடை பராமரிப்பு
உங்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறதா? அதை எப்படி சரியான அளவில் பராமரிப்பது என்று தெரியவில்லையா? உடல் உயரத்திற்கு தேவையான அளவில் உங்கள் எடை இருக்கவேண்டுமா? இந்த கோதுமை குண்டான உடலை எப்படி சரியான அளவில் வைத்திருக்க உங்கள் உதவுகிறது பாருங்கள்.
நொருக்குத் தீனிக்கு தடை
நமது அன்றாட உணவில் கோதுமையை சேர்த்துக்கொள்வது சிறப்பு. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் உடனடியாக பசி எடுக்காமலும் அதே நேரத்தில் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. இதனால் இடை இடையே நொருக்குத் தீனி தின்பதற்கான தேவைகள் இருக்காது.
கலோரிகள் குறைவு
அதிகப்படியான கொழுப்பும், சர்க்கரையும் இல்லாமல் உண்டாக்கப்படும் உணவுகள் எப்போதும் சிறந்ததே. ஆமாம் இந்த கோதுமையில் கலோரி குறைவாகவே காணப்படுகிறது. இது தேவையற்ற கொழுப்பு சேராமல் நம் உடல் சரியான அளவு எடையுடன் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.
இதையும் படிக்கலாமே..
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!
ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு டிப்ஸ்..!
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்கு கோதுமையானது நல் பலன்களை தரவல்லது.
ஆரோக்கியமான ஊட்டச்சத்து:
கோதுமையில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இது, இதயத்தின் தமனியில் ஏற்படும் அடைப்புக்கான வாய்ப்புகளை கணிசமாக குறைக்கிறது.
கொலஸ்ட்ரால்:
கோதுமையில் LDL கொழுப்பின் அளவு குறைவாக இருக்கிறது. இதை “கெட்ட” கொலஸ்ட்ரால் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்பட உதவுவதோடு இதய நோய் அபாயமும் குறைகிறது.
சர்க்கரை கட்டுப்பாடு
இரத்த சர்க்கரை அளவைப் பற்றி அக்கறை கொண்ட நபர்களுக்கு, கோதுமை மிக முக்கியமான ஒன்று என்றே கூறலாம்.
சில தானியங்களுடன் ஒப்பிடும்போது முழு கோதுமை உணவில் குறைந்த அளவு கிளைசெமிக் இருக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவும் படிப்படியாகவும் அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க ஊக்குவிக்கின்றன.
செரிமான ஆரோக்கியம்
தரமான செரிமானமானது நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறப்பாக உதவி செய்கிறது. கோதுமையானது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
கோதுமை ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. நல்ல குடல் பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் வலுவான நோயெதிர்ப்புக்கு முக்கிய பங்காற்றுகின்றது.
இறுதியாக…
முடிவில், கோதுமை ஒரு ஊட்டச்சத்து மிக்க தானியமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. உடல் எடை பராமரிப்புக்கு உதவுவது முதல் இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவது வரை உதவுகிறது. பல வகையில் உடலிற்கு உதவும் கோதுமையானது உங்கள் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. உங்கள் உணவில் அதிகமான கோதுமை சார்ந்த உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் துடிப்பான வாழ்க்கை வாழலாம்.
keyword: கோதுமை பலன்களை தெரிந்து கொள்வோமா?