எதிர்பார்ப்பு இல்லாமல் நம் கடமையைச் செய்வோம்.
Let us do our duty without expectation.
அரசன் ஒருவனுக்கு தன் நாட்டில் வாழும் மக்கள் பொது நலனில் அக்கரையாக உள்ளார்களா என்ற சந்தேகம் உண்டானது. அதைக் கண்டறிவதற்கு ஒரு சின்ன சோதனை வைக்க நாடினான். அன்றிரவே மாறுவேடத்தில் நகருக்குள் சென்று பொது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பாதையில் நடுவே பெரிய கல்லைக் கிடத்தினான்.
மறுதினம் அப்பகுதியில் யார் கண்ணிலும் படாதவாறு ஒளிந்திருந்து கண்காணிதான். பொது மக்கள் அந்த பாதை வழியாகச் செல்ல துவங்கினார்கள். அவர்களில் பலர் அங்கு புதியதாகக் கல் இருப்பதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு சிலரோ அதில் இடித்தும் கொண்டனர். இருந்தும் அதை நகர்த்துவதற்கு முயற்சி செய்யவில்லை. இன்னும் சிலரோ இந்த மன்னன் என்ன ஆட்சி செய்கிறான். மக்கள் நடக்கும் பாதையில் இவ்வளவு பெரிய கல் இருக்கிறது இதையெல்லாம் மன்னனுக்குக் கவனிக்க எங்கே நேரம் இருக்கிறது என்று காது படத் வசைபாடிக் கொண்டே சென்றார்கள். அப்படி வசைபாடிய எவனும் அந்த கல்லை நகர்த்தித் தள்ளிப் போட முயற்சி கூடச் செய்யவில்லை.
இதையும் படிக்கலாம்
கடவுள் வந்து வரமெல்லாம் தரமாட்டார்.
நாட்டு மக்களின் மீது சிறு வருத்தம்
இதையெல்லாம் பார்த்த அந்த மன்னனுக்கு நாட்டு மக்களின் மீது சிறு வருத்தம் கூட ஏற்பட்டது. இருந்தும் கடைசிவரை என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று பொறுமையாக இருந்தான். அப்போது அந்த வழியாகக் காய்கறி மூட்டைகளுடன் வந்த வியாபாரி ஒருவன் நடுப் பாதையில் கல் இருப்பதைக் கண்டு சுமைகளை இறக்கி வைத்துவிட்டு. அந்த கல்லை நகர்த்தினார். கொஞ்ச நேரச் சிரமத்திற்குப் பிறகு அந்தக்கல் அங்கிருந்து நகர்ந்தது. நகர்த்திய கல் இருந்த இடத்தில் ஒரு பண முடிப்பு இருந்தது. அதில் தங்கக் காசுகளும் கொஞ்சம் பணமும் இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் இந்த கல்லை நகர்த்தியவர்களுக்கான கூலி இதில் இருக்கிறது. இதைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம் என்று அரசு முத்திரையுடன் கடிதம் இருந்தது. அந்த வியாபாரி சந்தோசத்தில் அந்த பணமுடிப்பை எடுத்துச் சென்றான்.
மன்னனும் தான் வைத்த சோதனையில் ஒருவனாவது வெற்றி பெற்றானே என்று சந்தோசமும், எதிர்பார்ப்பு இல்லாத இதுபோல ஆட்களும் தன் நாட்டில் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியும் அடைந்தான்.
எந்த ஒரு பொதுச் சேவையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்து கொண்டே இருந்தால் நாம் எதிர்பார்க்காத நிலையில் நமக்கு நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் நம் கடமையைச் செய்வோம்.
Keywords: Let us do our duty, Motivation Stories, Motivation, motivational stories, short motivational stories, motivational short stories
You must log in to post a comment.