பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம். Lawyers protest in Perambalur.
பெரம்பலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒன்று கூடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார், ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று கூறினர்.
இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் குன்னத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார நீதிமன்றங்கள் திறப்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Keywords: Lawyers protest, Lawyers protest in Perambalur
You must log in to post a comment.