எறையூரில் லாரி மோதி ஆடு மேய்த்த தொழிலாளி பலி. Larry collision kills worker in Erayur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சின்னப்பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 48). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேப்பந்தட்டை தாலுகா எறையூரில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முனுசாமியை(45) கைது செய்தனர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Larry collision
You must log in to post a comment.