Kuwait | Soodana Kalanilaigal: Nalanaik Kappatrum valigal
மக்கள் விழிப்புணர்வை பெரும் நோக்கில் “Climate Change … Enhance Your Health” (“காலநிலை மாற்றம்.. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்”) என்ற தலைப்பில் கடந்த புதன் கிழமை பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை குவைத் சுகாதார அமைச்சகம் நடத்தியது. இந்த நிகழ்ச்சி சுகாதார மேம்பாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் அபீர் அல்-பாஹோ மற்றும் ஷேகா ஷேகா அல்-அப்துல்லாவின் முன்னிலையில் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தின் தீவிரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாகும்.
நிகழ்ச்சி சம்மந்தமாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் டாக்டர் அல்-பாஹோ, அதிக வெப்பநிலை மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் நல பிரச்சினைகளை தவிர்க்க காலை 11:00 மணிமுதல் மதியம் 4:00 மணி வரை திறந்த வெளிகளில் வேலைகள் செய்வதை தவிர்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் அதிக வெப்ப நேரங்களில் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்களை அவர் குறிப்பிட்டார் அவை: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, வெளியே அதிக உடற்பயிற்சிகளை தவிர்ப்பது, இளஞ்சிவப்பு நிறத்திலான நெருக்கமான உடைகளை அணியாமல் இருப்பது, நிழலில் ஒதுங்குவது, வெயில் தொப்பிகள் மற்றும் கண்ணாடிகளை அணிதல், மற்றும் தினமும் குளித்தல்.
இன்று காலை புரோமினேட் (Promenade) மாலில், தேசியக் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகளை எதிர்க்கும் குழுவின் முன்னிலையில், “காலநிலை மாற்றம்… உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில், டாக்டர் அல்-பாஹோ, இந்த நிகழ்வில், வெப்பநிலைகள் மற்றும் வெப்ப அழுத்தங்களை சமாளிக்கும் முறைகள் குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் கூறினார்.
இந்த ஆலோசனைகள் ஆடியோ, வீடியோ மற்றும் எழுத்து வடிவங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களில் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து அணுகலாம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அதிக வெப்பநிலைகளுடன் தொடர்புடைய ஆபத்துகளை விளக்கியும், அவற்றைத் தவிர்க்க வழிகாட்டுதல்களையும், வெப்பக்காற்று, வெப்ப அழுத்தம் மற்றும் பிற உடல் நலக் குறைபாடுகள் போன்ற நிலைகளுக்கு முறையாக பதிலளிக்கவும் அடிப்படை அறிவுரைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிக வெப்பநிலைக்கு உட்பட்டவர்களில் சில அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர் அல்-பாஹோ தெரிவித்தார். அவை: தெளிவான பதிலை அளிக்க முடியாமல் இருப்பது, மயக்கம், கண் திறக்க சிறமப்படுதல், 40 டிகிரி செல்சியஸ் தாண்டிய உடல் வெப்பநிலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தல், 8 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது அல்லது அடர் நிற சிறுநீர், விரைவான இதய துடிப்பு மற்றும் கனமான சுவாசம் ஆகியவை அடங்கும்.
இந்த வார இறுதியில் குவைத் முழுவதும் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று திடீரென்று தூசிகளை கிளப்பக்கூடிய சக்திவாய்ந்த காற்று வீசும் வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அப்துல்அசீஸ் அல்-கராவி தெரிவித்தார். கடலோர பகுதிகளில் குறிப்பாக மிகவும் சூடான நிலை காணப்படும்.
நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் 15 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடிய காற்று தூசிகளை கிளப்பும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலைகள் 47 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் நிலை 2 முதல் 6 அடி உயரத்திற்கு மாறுபடும்.
இரவு நேர வானிலை சூடானதாகவும், வடமேற்குப் பகுதிகளில் 12 முதல் 38 கிமீ வேகத்தில் காற்று வீசும். குறைந்தபட்ச வெப்பநிலைகள் 32 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், மற்றும் கடல் நிலை 2 முதல் 5 அடி உயரத்திற்கு மாறுபடும்.
Kewords: Soodana Kalanilaigal, Gulf Tamil News, GCC Tamil News, Kuwai Tamil news, Tamil Gulf News
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.