ADVERTISEMENT
Kuwait Disposal of 550 kg of spoiled meat

Kuwait: கெட்டுப்போன 550 கிலோ இறைச்சி அகற்றம்

Kuwait: Disposal of 550 kg of spoiled meat

முபாரகியா பகுதியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் உணவு உபயோகத்திற்கு உகந்ததல்லாத 550 கிலோ கெட்டுப்போன இறைச்சி அகற்றப்பட்டது. இந்த தகவலை பொது உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுக்குழுமத்தின் தலைவர் முஹம்மது அல்கந்தாரி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பிரத்தியேக அறிக்கையில் அல்கந்தாரி இதைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 13 உணவகங்கள் வரையறுத்துள்ள பல விதிமுறைகளை மீறியதால் ஆய்வுக் குழுக்களால் மூடப்பட்டதாகவும், அதில் கெட்டுப்போன இறைச்சி, உணவகங்களுக்குள் இனம் தெரியாத புழுக்கள் மற்றும் சில இடங்களில் எலிகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஈதுல் அத்ஹா பண்டிகைக்குப் பின் ஆய்வுக் குழுக்கள் பல்வேறு உணவகங்களுக்குப் பார்வையிடச் சென்றதில் இரண்டு நிறுவனங்கள் மூடப்பட்டதுடன் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி அகற்றப்பட்டதாகவும் அல்கந்தாரி குறிப்பிட்டார்.

மீன் கடைகள், உணவகங்கள், இனிப்பு கடைகள், பேக்கரிகள், சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் அனைத்து உணவு தொடர்பான வியாபாரங்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அதன் முடிவு காலம் போன்றவற்றை எப்போதும் கண்காணித்து வருகிறோம். உணவுப் பொருட்கள் பாதுகாப்பில் எப்போதும் எச்சரிகையாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

Keywords: spoiled meat, Kuwait tamil news, Tamil Kuwait news, GCC Tamil News, Gulf Tamil News

Our Facebook Page

ALSO READ:
UAE : கூட்ட நெரிசலை தடுக்க ஆன்லைன் செக்-இன்.!
மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு
ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *