Kuwait Coast Guard Seizes 50kg of Cannabis
குவைத் கடலோர காவல்படையினர் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குவைத்: கஞ்சா கடத்தல் காரர்களின் திட்டத்தை தடுத்து அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய கடத்தல் முயற்சியை குவைத் கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தி பாராட்டு பெற்றனர். 50 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 150,000 குவைத் தினார் என்று தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பொது நிர்வாகத்துடன் கடலோர காவல்படையினர் கடத்தல்காரர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் அதிநவீன ரேடாரைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கஞ்சாவை கொண்டு வர முயன்ற நான்கு பேரை கைது செய்தனர்.
கடல் எல்லையை கண்காணித்த போது கடத்தல் முயற்சி குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக விசாரணை செய்து சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்ற பின்னர், அவர்களை கைது செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
மேஜர் ஜெனரல் முஜ்பில் பின் ஷூக், மற்ற கடலோர காவல்படை தலைவர்களுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டார். சட்டநடவடிக்கை மேற்கொள்ள சந்தேகநபர்களுடன் போதைப் பொருட்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ:
கத்தார்: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!
Keywords: Kuwait Coast Guard, Cannabis, Kuwait News Tamil, Kuwait Tamil News, Gulf News Tamil, GCC Tamil News