Kuwait: 60% Price Cut for 200+ Drugs
குவைத்தில் 200 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு 60% வரை விலை குறைப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
குவைத் சுகாதார அமைச்சர் அஹ்மத் அல்-அவாதி தனியார் சுகாதார துறையில் 209 மருந்துகள் மற்றும் மருத்துவ உற்பத்திகளுக்கான முக்கிய விலை குறைப்புகளை அனுமதித்துள்ளார். மருந்து விலைகளை சீராக்குவதற்கான வழக்கமான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முக்கிய சிகிச்சைகளுக்கான மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆண்ட்டிபயாட்டிக், கொழுப்பு மேலாண்மை ( cholesterol management) மற்றும் பிற முக்கிய மருந்துகளின் விலை குறைப்பை அமைச்சகத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விலைகளைச் சரிசெய்து, நோயாளிகளுக்கான குறைந்த விலையில் மருந்து வழங்குவதை உறுதி செய்யவும் மற்றும் தேசிய மருந்து துறைக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலைகள் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமைப்பு அதிகாரப்பூர்வ கெஜட்டில் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். தனியார் சுகாதார துறைக்கு மாற்றங்களைச் செயல்படுத்த போதுமான நேரத்தை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முயற்சி குவைத்தின் மக்களின் நலனில் அக்கரை கொள்வதுடன் உள்ளூர் மருந்து உற்பத்தியை ஆதரிக்கிறது.
Keywords: Price Cut, Gulf Tamil News, Kuwait Tamil News, GCC Tamil News,
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
ஹிஜ்ரி புத்தாண்டு: தனியார் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு