‘குதிரைவாலி அரிசி’ இதில் என்ன இருக்கிறது?
தானியங்கள் எப்போதுமே நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பலன் தரக்கூடிய உணவுப் பொருள். அந்த வகையில் Kuthiraivali Rice குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கான பலன்கள் என்ன? அதை எப்படிச் சாப்பிடலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கப்போகிறோம்.
தானியத்தில் குதிரைவாலி என்பது சிறுதானிய வகைகளில் ஒன்று. தற்போது தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்குச் செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. குதிரைவாலி அரிசிக்கென்று தனிச் சிறப்புக் குணம் உண்டு. இந்த சிறு தானியம் எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்துமிகுந்த உணவாகும். இதை ஏன் குதிரைவாலி என்று அழைக்கப்படுகிறது தெரியுமா? கதிர் விட்ட பின் தானியங்கள் கொத்தாகக் குதிரைக்கு வால் முடி தொங்குவது போலக் காட்சி தருவதால் இதற்குக் குதிரைவாலி என்ற காரணப் பெயர் உண்டானது.
மானாவாரி பயிர் என்பதால் நச்சுத்தன்மை இருக்காது. அதே நேரத்தில் உமி நீக்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியாது. இது புற்கள் வகையைச் சேர்ந்த தாவரம் ஆகையால் இதை புல்லுச்சாமை என்றும் அழைப்பதுண்டு.
குதிரைவாலி அரிசியின் வரலாறு: (Kuthiraivali Rice)
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே பயிரிடப்பட்டு வருகின்ற சிறுதானியம் இது.
சத்துக்கள்: Horseradish / Kuthiraivali Rice benefits
மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. சிறியதானாலும் இதில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். மேலும் இதில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது.
கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து குதிரைவாலி-ல் உள்ளது. கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் இருக்கிறது. குறிப்பாக இதில் மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது.
சராசரியாக 100 கிராம் குதிரைவாலியில் புரதச் சத்து 6.2 கி, கொழுப்புச் சத்து 2.2 கி, தாது உப்புகள் 4.4 கி, நார்ச்சத்து 9.8 கி, மாவுச்சத்து 65.5 கி, கால்சியம் 11 மி.கி, பாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.
குதிரைவாலி அரிசி பயன்கள்:
- குதிரைவாலியைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
- செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்துகிறது.
- இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளைக் கரைக்கும்.
- கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
- இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
- ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
- செரிமானத்தின் போது ரத்தத்திலிருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
- உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியைச் சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
குதிரைவாலி அரிசியை எப்படிச் சமைப்பது? Horseradish / Kuthiraivali Rice benefits
இந்த அரிசியை ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து, அதன் பிறகு சமைக்க வேண்டும். தினமும் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
வளரும் பிள்ளைகளுக்கு அவர்களது உடல் எடை, உயரம் பொறுத்து குதிரைவாலி சேர்க்கலாம். கர்ப்பகாலத்திலும் கர்ப்பிணிகள் அவ்வப்போது இந்த அரிசியை எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு வேண்டிய ஆற்றலைத் தருகிறது.
அரிசியைச் சாப்பிட விரும்புபவர்கள் அதிகம் பாலீஷ் செய்த அரிசியை வாங்கக் கூடாது. குறைந்த அளவில் தீட்டப்பட்ட அரிசியை வாங்கி சமைத்துச் சாப்பிட வேண்டும்.
கஞ்சி செய்து பயன்படுத்தலாம்
சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள் சத்துமாவு கஞ்சியிலும் சேர்க்கலாம். அல்லது கஞ்சியாக்கிக் குடிக்கலாம். இதில் தயிர்ச் சாதம், சாம்பார் சாதமும் செய்யலாம். இதன் ருசி ரொம்பவும் சுவையாக இருக்கும்.
அதே போலச் சர்க்கரைப் பொங்கல், லட்டு, அதிரசம் போன்ற இனிப்பு வகைகளையும் செய்யலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது காய்கறிகளைச் சேர்த்து உப்புமா போன்று செய்து கொடுக்கலாம். தற்போது சிறுதானிய உணவுகளில் செய்யப்பட்ட பிஸ்கட் வகைகளும் கிடைக்கிறது. அதையும் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Kewords: Horseradish rice benefits, Kuthiraivali Rice benefits, Kuthiravali