பெரம்பலூர் நான்குரோடு அருகே வாகனம் மோதி பலி. Killed in vehicle collision near Perambalur Four Road
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 37). தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்குரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Killed in vehicle collision, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.