அமீரகத்தின் அஜ்மானில் கேரளா மாணவர் மரணம்..!
Kerala student dies in Ajman
அஜ்மானில் கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவர் வசித்து வந்த கட்டிடத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச்சம்பவத்தில் அந்த மாணவனின் உடல் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை அஜ்மான் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் இது சம்மந்தமான விபரங்களை மாணவனின் பெற்றோருக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமீரக செய்தி ஊடகமான கலீஜ் டைமில் வெளிவந்த செய்தி விபரமாவது:
நேற்று முந்தைய தினம் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவாலய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஆனால் அந்த மாணவர் எப்படி தன் வீட்டில் இருந்து விழுந்து இறந்தார் என்பது தெரியவில்லை.
வாகனம் மூலம் அமீரகத்திலிருந்து சவுதிக்கு எளிமையாக செல்லலாம்.!
அஜ்மானின் குளோபல் இந்தியன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் உத்தேசித்துள்ளனர். இது தொடர்பாக சமூக சேவகர் அஷ்ரப் தாமரசேரி கூறுகையில், “நாங்கள் இந்த நாட்டின் சட்ட சம்பிரதாயங்கள் மற்றும் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். “அது முடிந்ததும், உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும், அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும்” என்று தெரிவித்தார்.
சிறுவனுக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர். அவரது தந்தை ஒரு தொழில்முனைவோர் மற்றும் அவரது தாயார் செவிலியராக துபாயில் பணிபுரிகிறார்.
Keywords: Ajman News, Gulf news in Tamil, GCC News, UAE News, Kerala student dies in Ajman