ADVERTISEMENT
Kerala Family Tragically Dies in Kuwait Apartment Fire

கேரள குடும்பம் குவைத் தீவிபத்தில் பரிதாப மரணம்

Kerala Family Tragically Dies in Kuwait Apartment Fire

அப்பாசியாவில் ஏற்பட்ட தீவிபத்தில், கேரளாவில் நீரட்டுப்புரம் குடும்பம் மூச்சுத்திணறி உயிரிழந்தது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டது.

அப்பாசியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் கேரளாவில் நீரட்டுப்புரம், அலப்புழாவில் இருந்து வந்த ஒரு குடும்பம் உயிரிழந்தது. மேத்யூஸ் முலக்கல், அவரது மனைவி லினி ஆப்ரஹாம், மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் ஆகிய ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் உயிரிழந்தாக தெரிகிறது.

இக்குடும்பம் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 4 மணிக்கு கேரளாவிலிருந்து குவைத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இரவு 8 மணியளவில், மேத்யூஸ் முலக்கல் குடும்பம் தங்கியிருந்த இரண்டாவது மாடியில் ஏர் கண்டிஷனரிலிருந்து ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

ADVERTISEMENT

மேத்யூஸ் முலக்கல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். லினி ஆப்ரஹாம் அதான் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்தவர். அவர்களின் குழந்தைகள் பவன்ஸ் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் மங்காப் பகுதியில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் இந்த சம்பவம் அங்கு மீண்டும் ஒரு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக ஜெனரல் பையர் ஃபோர்ஸ் தனது “X” ப்ளாட்பார்மில் இக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அவர்கள் கட்டுப்படுத்தியதாக அறிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெறுவதற்காக சம்பவ இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் பையர் ஃபோர்ஸின் செயலதிகாரி மேஜர் ஜெனரல் காலித் ஃபஹத் தீவிபத்துக்கான இடத்தை பார்வையிட்டு விசாரித்தார்.

ADVERTISEMENT

குவைத் பையர் ஃபோர்ஸ் (KFF) கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு அறிவுரை ஒன்றை வெளியிட்டது. குறிப்பாக, 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருக்கும்போது தீ பாதுகாப்பு உபகரணங்கள் அவசியமாக வைத்திருக்கவும் அவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. மின்கசிவுகள் அதிகமானத் தீ விபத்திற்குக் காரணமாகும் என்பதால் தேவையற்ற மின்சாதனங்களை அணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதில் தீயைத் தவிர்க்கக்கூடிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குடியிருப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Kewords: Kerala Family Tragically Dies, Gulf Tamil News, GCC Tamil News, Kuwait Tamil news

அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ALSO READ:
துபாய் முனிசிபாலிட்டி: கார் சுத்தம் செய்ய தவறினால் அபராதம்
அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி புதுப்பிப்பு முக்கியத்துவம்
துபாய் முனிசிபாலிட்டி: கார் சுத்தம் செய்ய தவறினால் அபராதம்
ஐக்கிய அரபு அமீரகம்: யூனியன் உறுதிமொழி தினம்

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *