கீரைகளும் அதன் பயன்களும் தெரிந்து கொள்வோமா? Keraigalum Athan Payangalum.
கீரைகள் உண்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது. கீழே மூன்று வகையான கீரைகள், அதிலுள்ள சத்துகள் மற்றும் மருத்துவ பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்.
அகத்தி கீரை: Agathi Keerai
இந்த கீரையில் சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகளவில் இருக்கிறது.
அகத்தி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்: Agathi Keerai Benefits
- பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வர நன்கு பால் சுரக்கும்.
- வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும்.
- அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
- உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
- குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
- அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும்.
- அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
- அகத்தி கீரை வயிற்றுப் புண் என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
முசுமுசுக்கை கீரை: Musumusukkai Keerai
இந்த முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை அதிகமாக உள்ளது.
முசுமுசுக்கை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்: Musumusukkai Keerai benefits
- முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும்.
- முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- இந்தக் கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும்.
- காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.
முருங்கை கீரை: Murungai Keerai
முருங்கை கீரையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
முருங்கை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்: Moringa leaves benefits
- இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
- பல் கெட்டிப் படும்.
- தோல் வியாதிகள் நீங்கும்.
அடுத்தடுத்த பதிவுகளில் மற்ற பிற கீரைவகைகளை பற்றி பார்ப்போம்.
Keywords: Murungai Keerai, Moringa leaves, Agathi Keerai, Ahathi Keerai, Musumuskkai Keerai, Keraigalum Athan Payangalum