Karuppu Kavuni

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

11318

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice benefits

கருப்பு கவுணி அரிசியின் முக்கியத்துவம் சமீப காலங்களில் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. இந்த அரிசியை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கவுனி அரசியில் உள்ள சத்துக்கள் (Kavuni Arisi)

இந்த கருப்பு கவுணி அரசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, மற்ற வகை அரிசிகளை விட இதில் கூடுதலாக  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அந்தோசயினின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 1 (Kavuni Arisi Benefits)

அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 2 (Karuppu Kavuni Arisi Benefits)

குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுணி அரிசியில் செய்த உணவுகளை உண்பதன் மூலம் மிக எளிதாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 3 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த அரிசி நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. கவுணி அரிசியில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதுடன், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்குகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 4 (Karuppu Kavuni Arisi Benefits)
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு கவுணி அரிசியை உண்பதால் நம் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. நமது உடல் எடையும் கண்காணித்து ஆற்றலை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 5 (Karuppu Kavuni Arisi Benefits)

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கருப்பு கவுணி அரிசியை தினசரி உணவாக சாப்பிடுவதன் மூலம் நமது உடலானது நீரிழிவு நோய் எதிர்த்து போராட உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 6 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த கருப்பு கவுணி அரிசியில் உயிர்ச்சத்து விட்டமின் பீ/ஈ அதிகளவு நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

கருப்பு கவுனி அரிசியை கொண்டு என்னென்ன உணவுகளை சமைக்கலாம்?

இனிப்பு பொங்கல், பாயசம், சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை ஆகியவைகளை செய்து சாப்பிடலாம்.

Our facebook page

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்

சாமை அரிசியின் பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள்

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

தினை அரிசியின் பயன்கள் || Thinai rice

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..!

 ‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா?

‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா?

Keywords: Kavuni rice, Karuppu Kavuni rice benefits, Karuppu Kavuni, black rice, Kavuni Arisi




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights