'கருப்பட்டி' இது எலும்புகளுக்கு உறுதியை தருவதில் கில்லாடி ..!

‘கருப்பட்டி’ இது எலும்புகளுக்கு உறுதியை தருவதில் கில்லாடி ..! Karuppatti Medical Benefits

504

‘கருப்பட்டி’ இது எலும்புகளுக்கு உறுதியை தரும் நல்ல மருந்து. Karuppatti Medical Benefits!

இரும்பு மற்றும் கால்சியம் சத்து பனங்கருப்பட்டியில் அதிகமாக இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

‘கருப்பட்டி’ யின் பலன்கள் ..!

Karuppatti Medical Benefits…!

  • விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள்  நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
  • இதில் நார்ச்சத்தும்  அதிகமாக இருக்கிறது.
  • குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
  • கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி  புரியும்.
  • கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. பனங்கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.
  • இதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
  • சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி பனங்கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல்  காக்கும்.
  • கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து  பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில்  பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.

Our facebook page

keywords: health tips, health advice, simple health tips, karuppatti, panangarkandu, Karuppatti Medical Benefits
%d bloggers like this: