கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | Karunguruvai Arisi Benefits
பழங்கால உணவு வகைகளை நோக்கி திரும்பும் நம் சமூகம் தற்போது பாரம்பரிய அரிசிகளை தேடி தேடி அலைகிறது. எத்தனையோ நெல் ரகங்கள் மீட்கப்பட்டு இப்போது விவசாயம் செய்து அறுவடை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த கருங்குறுவை அரிசியும் ஒன்று. மருத்துவ குணம் மிக்க பாரம்பரிய அரிசியில் இந்த கருங்குறுவையும் ஒன்றாகும். இந்த கருங்குறுவையில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருங்குறுவை அரிசி Karunguruvai rice Benefits
120-125 நாட்களில் அறுவடை செய்யப்படும் இந்த அரிசியை இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக போன்ற தென் மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. வருடத்தில் டிசம்பர் – ஜனவரி மற்றும் ஜூன் – ஜூலை ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்து காணப்படும் இந்த அரிசியானது பாரம்பரியமிக்க மற்ற அரிசி வகைகளில் முதன்மை வாய்ந்தது இந்த கருங்குறுவை.
புற்றுநோய் செல்களை கட்டுபடுத்துகிறது: Karunkuruvai Rice Health Benefits in Tamil:
கருங்குறுவை அரிசியில் புரதசத்து மற்றும் மாவுசத்து இருக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க உதவுகிறது. தொடர்ந்து இந்த அரிசியை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்தவும், மகப்பேறு அடைவதற்கும் முக்கிய மருந்தாக இந்த அரிசி பயன்படுகிறது.
சர்க்கரை நோய்: Karunkuruvai arisi Payangal Tamilil
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரிசி பெரிதும் உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.
சருமம் பளபளப்பாக: Karunguruvai Health Benefits
வயது முதிர்வை தடுத்து, சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. பித்தத்தை சரி செய்யவும் இந்த அரிசி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. சித்த மருத்துவத்தில் முதன்மையான மருந்தாக இந்த கருங்குறுவை அரிசி பயன்படுகிறது. அதே போல யானைக்கால் நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க இந்த அரிசி உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
karunguruvai rice recipe:
இனிமேல் கருங்குறுவை அரிசியை வாங்கி அதில் நீங்கள் இட்லி, தோசை மற்றும் கஞ்சி போன்ற வகைகளில் சமையல் செய்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டியதுதானே.
Keywords: karunguruvai rice nutrition facts, karunguruvai rice health benefits, karunguruvai rice uses, Karunguruvai Arisi