கல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.

81

கல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.


இன்று நான்காம் ஆண்டில் கால் தடம் பதிக்கும் கல்லாறு தொலைக்காட்சியின் இந்த பயணத்தில், எங்களுடன் துணை நிற்கும் விளம்பரதார நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், NT Broadcast நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் குறிப்பாக எமது தொலைக்காட்சி பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாகத் தெரிவிக்கிறோம்.

எமது கல்லாறு தொலைக்காட்சி வேப்பந்தட்டை வட்டத்தில் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதம் வரை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பானது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அதாவது தமிழ்ப் புத்தாண்டு அன்று பெரம்பலூரில் எமது நிறுவன அலுவலகத்தை மாற்றி NT Broadcast நிறுவனத்தின் மூலம்  மாவட்ட அளவில் எமது ஒளிபரப்பினை விரிவு படுத்தப்பட்டது.

நான்காம் ஆண்டின் துவக்க விழாவினை சிறியதாக எமது அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. எமக்கு எல்லா வகையிலும் ஆதரவு தந்து துணையாக நிற்கும் அப்பாய் குருப்ஸ் உரிமையாளர் திரு. வரதராஜன் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்தார்.

இதில் கல்லாறு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஜியாவுல் ஹக், கேமரா மற்றும் ப்ரோக்ராம் எடிட்டர்  நூருல் ஹக்,  நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் தொகுப்பாளர் விஷ்ணு ஆகியோருடன் எங்களது டெக்னிக்கல் மற்றும் சப்போர்ட்டிங் டீமும் கலந்து கொண்டது.

இந்த குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில் எமது தொலைக்காட்சியில் ப. செல்வகுமார் அவர்கள் நடுவராகப் பங்கேற்ற எட்டுக்கும் அதிகமான சிறப்புப் பட்டி மன்றங்கள், ஒரு கை பார்ப்போம் என்ற விவாத மேடையை வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி, அன்னை மெட்ரிகுலேசன்  மற்றும் அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரிகளில் நடத்தியுள்ளோம். லேடீஸ் vs லேடீஸ், கல்லாறு கனெக்சன், அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு நேரலை போன்றவற்றை விளம்பரதாரர்கள் ஆதரவுடன் சிறப்பாக நடத்தியுள்ளோம்.

கடந்த ஆண்டில் பெரம்பலூர் சங்கமம் என்னும் நிகழ்ச்சியை Hi5 தொலைக்காட்சியுடன் இணைந்து J.K. மஹாலில் நடத்தப்பட்டது. இதில் பிரபல தொலைக்காட்சி பிரபலங்கள் பங்கு பெற்று நமது மாவட்ட மக்களை மகிழ்வித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் கல்லாறு பெரம்பலூர் சிங்கர் என்னும் ரியாலிட்டி ஷோவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தாடி பாலாஜி மற்றும் பாடகர் ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது பெரம்பலூர் உள்ளூர் சேனல்கள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாபெரும் ரியாலிட்டி ஷோ 14 வாரங்களாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து எங்கள் அடுத்தடுத்த பயணத்தின் முதற்கட்டமாக இந்த வருடம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கபடி அணியினருக்காக கல்லாறு கபடி லீக் (KKL) எனும் மாபெரும் கபடிப் போட்டி. இதற்கான ப்ரோமோ வீடியோவும் இன்று அப்பாய் குருப்ஸ் உரிமையாளர் அவர்களால் வெளியிடப்பட்டது.

கல்லாறு கபடி லீக் (KKL)

  • போட்டி எப்போது?
  • எங்கே?
  • பரிசுத் தொகை என்ன?
  • எவ்வாறு உங்கள் அணியைப் பதிவு செய்ய வேண்டும்?

போன்ற விபரங்களை விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த கல்லாறு கபாடி லீக் போட்டி அனைத்தும் எமது கல்லாறு டிவியில் நேரலையில் ஒளிப்பரப்ப உள்ளோம்.

வாருங்கள், விளையாடுங்கள், பரிசுடன் மாவட்ட அளவில் பிரபலமாகுங்கள்.

 

அன்புடன்

கல்லாறு ஊடக குழுமம்
Leave a Reply

%d bloggers like this: