மச்சான் Vs மச்சான் – 24|02|2019

104

மச்சான் Vs மச்சான் – 24|02|2019

நாட்டு நடப்பை லைட்டா தொட்டு பேசத்தான் இந்த பகுதி. சில நேரத்தில நாங்க போடுற மொக்கையால உங்களுக்கும் வெறுப்பாகலாம் அதுக்கு நிர்வாகம் பொருப்பாகாது.

மச்சான் ஒரு டீ குடிப்போமா?

ம் ம் சரி வா குடிச்சிட்டு போவோம். அண்ணன் ரெண்டு டீ போடுங்க.. ஒன்னுல சக்கரை கொஞ்சம் தூக்கலா.

என்ன மச்சான் மொபைல நோண்டிட்டு இருக்கே. பேஸ்புக்கா?

ஆமா மச்சான், இந்த அரசியல் வாதிங்க பண்ற அலப்பரைகளப் பார்த்தா செம கடுப்பாகுது. நாங்க தனியாதான் நிப்போம்கிறானுங்க, அப்புறம் கூட்டணிங்கிறாங்க ஏன் மச்சான் அப்படி? இவங்களுக்கு கொள்கை, கோட்பாடு அதெல்லாம் ஒன்னும் கிடையாதா?

யார் சொன்னது குறிக்கோள்கள் எல்லாம் இருக்கு ஆனா அது அப்பப்போ மாறிக்கிட்டே இருக்கு.

என்ன மச்சான் டிபன்ட்ஸ் அபான் மனியா?

அப்படியும் சொல்லலாம், ஆனா அதைவிட தன்னையும் தன் கட்சியையும் காப்பாத்திக்கனுமில்ல. இக்கட்டான ஒரு சூழல் வரும்போது கொள்கையாவது…

தம்பி இந்தா டீயை எடுங்க.. நீங்க என்னமோ கொள்கையோட இருக்குற மாதிரி பெருசா பேசுறீங்க.. இந்த பேஸ்புக்குல நீங்க என்ன ஸ்டேட்டஸ் பர்ஸ்ட் போட்டீங்க இப்ப என்ன என்ன ஸ்டேடஸ் போடுறீங்கன்னு பாருங்க. படிச்ச நீங்க மட்டும் என்ன சரியாவா முடிவு எடுக்குறீங்க. எல்லாறும் கத்துனா நீங்களும் கத்துறீங்க எல்லாறும் மூடிட்டு இருந்தா நீங்களும் மூடிட்டுத்தானே இருக்கீங்க. இதுல மத்த கட்சி கூட்டணி பத்தி பேச வந்திட்டீங்க.

அண்ணே நீங்க அந்தக்கட்சியா?

அதானே உடனே இப்படி ஒரு பேரு கிடைக்கும்னு தெரியும். இதுவரைக்கும் கட்சி கூட்டணியை மாற்றாத தனித்து நின்று ஜெயிச்ச கட்சியை தமிழ்நாட்டுல ஒன்னெ ஒன்னு சொல்லு. எனக்கே சில நேரம் செம காண்டாகும். எப்படியா இருந்தாலும் எலக்சன் வந்தா ஒட்டிக்கத் தானே போறானுங்க அப்புறம் எதுக்கு அவ்வளவு பேச்சு பேசனும்னு எவன் சொல்றதையும் கேட்டுக்க மாட்டேன். சுயமா முடிவெடுத்துதான் நான் ஓட்டுப் போடுவேன். கட்சியை மக்களுக்காக நடத்துனா கொள்கை இருக்கும். தமக்காகத்தானே கட்சியை நடத்துராங்க..

அதுதாண்ணே எங்களுக்கும் காண்டாகுது. இந்தாங்க டீக்கு காசு. நாளைக்கு பாப்போம்ணே..
Leave a Reply

%d bloggers like this: