கல்லாறு ஊடக குழுமத்தின் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

103

கல்லாறு ஊடக குழுமத்தின் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!


தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.

அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன் பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.

ஆகவே இந்த தொழிலாளர் தினத்தில் விடுமுறையில் ஓய்வில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இன்றும் உழைத்து கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் எங்களது கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாக தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்.
Leave a Reply

%d bloggers like this: